Monday, 28 October 2013

papanasam sathukkal


ஓம் நமசிவாய 


பொதிகை மலை அடிவாரத்தில்  பல்வேறு சாதுக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதுக்களில் குறிப்பிடதக்கவர் ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகள். இவர் கேரளாவை சேர்ந்தவர். வட நாட்டில் பல புன்னிய தலங்களுக்கும் சென்று வந்தவர் அகஸ்தியர் அருவி அருகில் உள்ள கல்யாணி தீர்த்தத்தில் உள்ள குகையில் 12 ஆண்டு காலம் வாழ்ந்தார். அப்போது பாபநாசம் மின்நிலையம் அமைப்பு பணி நடந்து வந்ததால் அங்கிருந்து கீழே இறங்கி  பாபநாசம் தெப்ப குளம்  அருகில் உள்ள மண்டபத்தில் 10 ஆண்டு காலம் வாழ்ந்தார். பிறகு முதலியார் சமூக மண்டபத்திற்கு நேர் வடக்கே உள்ள  மலைக்குகையில் பல காலம் வாழ்ந்தார். இவர் மந்திரங்கள்  சித்த மருத்துவம் அறிந்தவர். எப்போதும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை உச்சரித்து தியானத்தில்  இருந்து வந்துள்ளார். மலைக்குகையிலே சமாதி ஆனார். ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகளுக்கு பல சீடர்கள் உள்;ரில் இருந்துள்ளனர். சீடர்கள் மந்திரம் மற்றும் வைத்தியம்  சாமிகளிடம் கற்று தொழில் முறையாக செய்துள்ளனர்.






 ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகளின் சீடர்களில் தற்போது வாழ்ந்து வருபவர் ஸ்ரீ முத்தையா சாமி அவர்கள். இவரது சொந்த ஊர்  தூத்துக்குடி மாவட்டம்  கழுகுமலை அருகில் உள்ள குறிஞ்சான்குளம். தந்தை சுப்பையா தேவர் தாய் செல்லம்மாள். தனது 20வது வயதில் பாபநாசத்திற்கு வந்தவர். இங்குள்ள திரு கருப்பகோணார் அவர்கள் நடத்தி வந்த அன்னசத்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகளின் சீடராக சேர்ந்து பனிவிடை செய்து வந்துள்ளார். ஸ்ரீ முத்தையா சாமி அவர்கள் சித்த மருத்துவம் தெரிந்தவர் என்றாலும் தொழில் முறையாக செய்யவில்லை. 15 அடி ஆழமுள்ள தண்ணீரில் நின்றாலும் இடுப்பளவு தண்ணீரில் நிற்பது போல மிதந்து யோகம் செய்யும் திறன் படைத்தவர். பல பச்;சிலை மூலிகைகளை அடையாளம் தெரிந்தவர். பாபநாசத்திற்கு வரும் பல சாதுக்களின் தரிசனமும் கிடைக்க பெற்றவர்.

No comments:

Post a Comment