ஓம் நமசிவாய
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILQ3yS0Z-w165YlymhvcO2Fs-cvY6IIvVVmGqq4Bs2EqCsYy4QH4zV81A3jGYBY-pzr55C8AgamXsKQp7WVgxtydVhvX2eESpG-ujtHqYDs0wUr2iQXhLB7xdoZ7Tbvi3MWXH9u5D3h3L/s320/2013-10-24+11.42.10.jpg)
பொதிகை மலை அடிவாரத்தில் பல்வேறு சாதுக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதுக்களில் குறிப்பிடதக்கவர் ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகள். இவர் கேரளாவை சேர்ந்தவர். வட நாட்டில் பல புன்னிய தலங்களுக்கும் சென்று வந்தவர் அகஸ்தியர் அருவி அருகில் உள்ள கல்யாணி தீர்த்தத்தில் உள்ள குகையில் 12 ஆண்டு காலம் வாழ்ந்தார். அப்போது பாபநாசம் மின்நிலையம் அமைப்பு பணி நடந்து வந்ததால் அங்கிருந்து கீழே இறங்கி பாபநாசம் தெப்ப குளம் அருகில் உள்ள மண்டபத்தில் 10 ஆண்டு காலம் வாழ்ந்தார். பிறகு முதலியார் சமூக மண்டபத்திற்கு நேர் வடக்கே உள்ள மலைக்குகையில் பல காலம் வாழ்ந்தார். இவர் மந்திரங்கள் சித்த மருத்துவம் அறிந்தவர். எப்போதும் “ஓம் நமசிவாய” மந்திரத்தை உச்சரித்து தியானத்தில் இருந்து வந்துள்ளார். மலைக்குகையிலே சமாதி ஆனார். ஸ்ரீஸ்ரீ சங்கரநாராயண கிரி சாமிகளுக்கு பல சீடர்கள் உள்;ரில் இருந்துள்ளனர். சீடர்கள் மந்திரம் மற்றும் வைத்தியம் சாமிகளிடம் கற்று தொழில் முறையாக செய்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ5YxXd_Fg6U2T9_uYnqc3EWBxhmHDiXYkFEPrCUlTIdFjOeCc7kNMHUK5tj7drwDyhs8qkXa6k2mdGyImD9PIYBxsQ6hi9nMXu935YrdgxJwes_UQPwdK22C6ggqHe83hvlo7YAgdmBz4/s320/2013-10-23+17.20.48.jpg)